மே மாதத்தில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு எதிர்வரும் ஜூன் 8 திகதி இரண்டாவது செலுத்துகை – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 31st, 2021

சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மே மாதத்தில் சினோபாம் முதலாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள், தாம் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது தடுப்பூசியையும் ஜூன் மாதத்தில் அதே திகதிகளில் பெற்றுகொள்ளமுடியும் எனவும் அவர் மேலும்  தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: