மேலும் 160 கொவிட் மரணங்கள் வதிவு!
Sunday, August 15th, 2021
நாட்டில் மேலும் 160 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த மரணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அறிக்கையின் அடிப்படையில் 30 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவர் மரணித்தார். மேலும் 30 க்கும் 59 க்கும் இடைப்பட்ட வயதுடைய 22 ஆண்களும் 13 பெண்களுமாக 35 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும் 60 பெண்களுமாக 124 பேரும் மரணித்தனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 935ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் கடந்த 3 நாட்களில் 471 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பழிவாங்கல்களில் நாம் ஒரு போதும் ஈடுபட மாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...
கணினி செயலிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நட...
|
|
|


