மேலும் சில காலத்திற்கு பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
Monday, June 14th, 2021
தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணக்கட்டுப்பாடுகளை தொடர்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்களும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும் குறித்த எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தினமும் இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


