மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு – நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரையில் 120 பேரின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் 6.3 மெக்னிடியுட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இதனையடுத்து மூன்று பின்னதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
000
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டு படங்களின் ஒரு பகுதி..
மே தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் பஸ்களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது!
விரைவில் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி!
|
|