மெல்லிய பொலித்தின்களைத் தடை செய்ய அனுமதி!

Thursday, July 13th, 2017

மெல்லிய பொலித்தின்களைத் தடை செய்வது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, தேசிய, சமயம், சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மைக்ரோன் 20க்கு சமமான அல்லது அதற்குக் குறைவான அடர்த்தி கொண்ட பொலித்தின் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்திகளை தடை செய்து தற்போதுள்ள சுற்றறிக்கையை அவ்வாறே நடைமுறைப்படுத்துதல், போன்றன, குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தியவசிய செயற்பாடுகள் தொடர்பில் 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தின் பயன்பாடு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வெறு விடயங்கள் அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன

Related posts: