மூன்று மாகாணங்களுக்கு டிசம்பரில் தேர்தல் !
Sunday, March 19th, 2017
ஆட்சிக்காலம் முடிவடைய உள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், கிழக்கு, வடமத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தேர்தல் டிசம்பரில் நடைபெறவுள்ளது.பதவிக்காலம் முடியும் மாகாண சபைகளின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமாயின் அதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.
எனினும் பதவிக்காலம் முடியும் வரை மாகாண சபைகளின் தேர்தலை எந்த வகையிலும் ஒத்திவைக்க போவதில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் இருவர் பலி - வளிமண்டவியல் திணைக்களம்!
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸார்!
தேர்தலுக்கு தேவையான பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம் - தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!
|
|
|


