மலேரியாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை  – சுகாதார அமைச்சு!

Wednesday, November 8th, 2017

அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள டெங்கு நுளம்பை போன்று மலேரியா நுளம்புகளும் வடமாகாணத்தில் பல இடங்களில் காணப்படுவதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி.ரஜீவ் தெரிவித்துள்ளார்.

இந்த மலேரியா நுளம்பு முதன்முறையாக மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். பின்னர் இது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடமாகாண பிரதேசங்களில் காணப்படுவதாகவும். இதனை இல்லாதொழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேரியா நுளம்புகள் காணப்படும் கிணறுகளில் அவற்றை இல்லாதொழிப்பதற்காக மீன்குஞ்சுகள் மற்றும் அவேற் என்னும் திரவம் கலக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  மலேரியா நோய் தொடர்பில் இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில் , மீண்டும் இரண்டு நாள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: