மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று!
Thursday, November 19th, 2020
பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அன்றைய தினம் சில வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மாத்திரம் ஆரம்பிப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக நேற்றைய தினம் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மானிப்பாய் இளைஞர்கள் துரத்தியதால் தலைதெறிக்க ஓடிய வாள்வெட்டுக் கும்பல்!
கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி!
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமை...
|
|
|
முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை...
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் – வருகின்ற...
கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர் தினேஷ் க...


