மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் 1 ஆம் திகதி ஆரம்பம்!
Sunday, September 1st, 2019
இலங்கையிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளை திறக்கப்படவுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் விடைத்தாள் மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்படும் 11 பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரி, பம்பலபிட்டி இந்துக் கல்லூரி, களுத்துறை ஞானோதய கல்லூரி, இரத்தினபுரி இந்துக் கல்லூரி, குருநாகல் புனித அன்னம்மாள் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் மற்றும் சீதாதேவி கல்லூரிக்கும், காலி விஹாரமஹாதேவி, வித்தியாலோக்க கல்லூரிகள், பதுளை, ஊவா கல்லூரி என்பன எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
Related posts:
நாட்டில் 30 சதவீதத்த மக்கள் விவசாயத்துறையைச்சார்ந்தவர்கள்!
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு!
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது - அதிகாரிகளது தவறான அறிவுறுத்தல்...
|
|
|


