நாட்டில் 30 சதவீதத்த மக்கள் விவசாயத்துறையைச்சார்ந்தவர்கள்!

Friday, February 24th, 2017

நாட்டின் மனிதவளத்தில் 30 சதவீதத்தினர் விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன்மூலம் மொத்த உற்பத்திக்கு 9 சதவீத பங்களிப்பு இடம்பெறுகிறது என வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய பாலுற்பத்தி தொழில்துறை குறித்து அரச மற்றும் தனியார்துறையைச் சேர்ந்தோரின் முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாலுற்பத்தி தொழில்துறை விரிவானவகையில்

பங்களிப்புச்செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

குறித்த கலந்துரையாடவில் நீல்சன் ஸ்ரீலங்கா, பொண்டே ராபிரெண்டிஸ் லங்கா போன்ற நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

151210175334_harsha_de_silva_640x360_harshadesilva

Related posts: