மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படும் பாடசாலைகள் – பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு!
 Monday, June 29th, 2020
        
                    Monday, June 29th, 2020
            
கடந்த மூன்றரை மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
எனினும் இன்றையதினம் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமுகமளித்திருந்தனர்..
ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிமுதல் 4 பிரிவுகளாக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கல்விச் செயற்பாடுகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இதன்போது எடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் குறித்து சுகாதாரதுறை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுவதற்கு வசதிகளை செய்தல், இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பென்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        