மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை செய்கிறது வடக்கு மாகாணசபை – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Tuesday, January 31st, 2017

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை வடக்கு மாகாணசபையும் அதனை முன்னிறுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்து வருகின்றது. இந்த நிலைமையால்தான் எமது பகுதியின் அபிவிருத்திகள் இன்று முடக்கப்பட்டு வருகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்தி சட்டமூலத்தை வடமாகாண சபை 2ஆம் தடவையாகவும் இன்றையதினம் வடக்கு மாகாணசபையின் 83 ஆவது கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் –

யுத்த காலத்திலும் சரி அது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலத்திலும் சரி எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை தடுத்து நிறுத்தவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய பங்கு வகித்துவருகின்றனர்.

குறிப்பாக சிங்களக் குடியேற்றம், காணி அபகரிப்பு, விகாரை அமைப்பு என பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வடக்கு மாகாணசபையும் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியிலோ அன்றி மக்களின் வாழ்வியல் தேவைகளிலோ அக்கறை செலுத்தி அவற்றை தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. மாறாக தேவையற்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி அதை மக்களிடம் பெரிதுபடுத்தி மக்களை அச்சமடைய செய்வதனூடாக சாதாரண பிரச்சினைகளையும் தீரா பிரச்சினைகளாக்கி மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை மேற்கொண்டுவருவது சிறுபிள்ளைத்தனமான செயலாகவே உள்ளது எனவும் இதனால்தான் யுத்தத்திலிருந்து மீண்டுவரும் எமது பிரதேசம் முழுமையான அபிவிருத்தியை எட்டமுடியாது இருப்பதற்கு காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

northern-provincil-councial-665472-1 copy

Related posts: