மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் – காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை!

Wednesday, May 1st, 2019

மூடியுள்ள வீடுகளையும் சோதனை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையில் திருப்திப்பட முடியாதுள்ளது.

வாள்கள் வீட்டில் உள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின்னர் விடுதலையாகின்றார். நீர்கொழும்பு முழுவதும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரியமுல்லையில் மாத்திரமே குறிப்பிட்ட சில வீடுகளை பாதுகாப்புப் படையினர் சேதனை மேற்கொண்டுள்ளனர். மூடியுள்ள வீடுகளையும் சோதனையிடுவதிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு மூடிய வீடுகளை சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் இல்லையென கூறப்பட்டுள்ளது. மூடிய வீடுகளையும் சோதனையிடத் தேவையான அதிகாரத்தை வழங்க வேண்டும். அத்துடன், இந்த பயங்கரவாத ஒழிப்புக்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தேவையான அதிகாரத்தை இராணுவத்துக்கு வழங்குமாறும் தான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் தெரிவித்துள்ளார்.

Related posts:

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் பாதுகாப்புத் தேடி வரவேண்டாம் - சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப...
தொடர்ந்தும் நாளாந்தம் 3 ஆயிரத்தை தாண்டும் தொற்றாளர்கள் - கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பே அவச...
கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்களுக்கு விடுதலை - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம...