முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டம்!

Wednesday, June 9th, 2021

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடையை தளர்த்திவிட்டு முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் முழுமையான ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை என்றும் கொவிட் தொடர்பான செயலணியும் இது குறித்து ஆராயவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழலில் அவ்வாறான முடிவை எடுக்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, அவ்வாறான தேவையேற்பட்டால் அதிகாரிகள் அது குறித்து ஆராய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவு குறித்தும் அரசாங்க தகவல்திணைக்களமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களோ தகவல் வழங்கும் எனவும் இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: