முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை முறைப்பாடு!

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மத்திய வங்கியின் நிதிச்சபை முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்த முறைப்பாட்டை அடிப்படையாக் கொண்டு விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நாளாந்தம் ஆலோசனைகளை வழங்கியதாக சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய முறை குறித்தும்வாக்குமூலம் பதிவு செய்யவேண்டியவர்கள் தொடர்பாகவும், சட்டமாஅதிபர் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணையின் பின்னர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
புகையிரதங்கள் மீது கல்லெறிவோருக்கு கடுமையான தண்டனை!
யாழ். மாநகர சபை ஆணையாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவ...
|
|