முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம் – யாழில் மீன்பிடிக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!
Tuesday, July 2nd, 2024
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குருநகர் 5 மாடி கட்டிடப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மைக்கேல் கொலின் டினோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கில் எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தயார் -யாழ். கட்டளைத் தளபதி
வெளிநாட்டு நாணயங்களை அனுமதியின்றி விற்பனை செய்ய முடியாது - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!!
|
|
|


