மும்மொழிகளில் இலங்கையில் புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம்!

புதிய பிறப்புச் சான்றிதழில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரங்கள் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பதிவாளர் நாயகம் சதுர விதானகே தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
16 வயதில் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையில் உள்ளடக்கப்படும் அடையாள அட்டை இலக்கத்தையும் இந்த பிறப்புச் சான்றிதழில் உள்ளடக்குவதற்கு ஆட்பதிவு திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடையாள அட்டை இலக்கம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளைகள் பிறந்தவுடன் இணையத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ளக்கூடிய ஓர் முறைமை குறித்து ஆராயப்பட்டு வருவதாக பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|