முப்படையினர் பொலிசாருடன் வடக்கின் புதிய ஆளுநர் சந்திப்பு – பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வு!
Thursday, October 21st, 2021
முப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக வடக்கின் புதிய ஆளுநர்’ ஜீவன் தியாகராஜா ஆராய்ந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த ஆளுநர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார ,யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த லியனகே, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், கடற்படை, விமானப் படை, இராணுவ அதிகாரிகளிடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றுமாறு கோரிக்கை!
வரவு – செலவுத்திட்டம் குறித்த கண்காணிக்கக் குழு நியமனம்!
யாழில் 17 வயதுச் சிறுமிக்கு முதியவர் செய்த கொடூரம்!
|
|
|


