முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Tuesday, June 25th, 2024
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
வேலணை பிரதேச அபிவிருத்திக்காக 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!
எதிர்வரும் 14ஆம் திகதியன்று கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - பேராயர் மெல்கம் கர்தினல்...
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
|
|
|


