முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

மாணவர்களது முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள். அவர்களே எங்கள் வழி காட்டிகள். அவர்களை நாம் போற்றுவதில் பெருமையடைகிறோம் என பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையில் நேற்று(06) இடம்பெற்ற ஆசிரியர்கள் தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது சமூகத்தின் மத்தியில் போட்டி, பொறாமை, வஞ்சகம், சதி, சூழ்ச்சி, கபடத்தனங்கள் என பல்வேறு விதமான காழ்ப்புணர்ச்சிகள் வலுவாக வளர்ந்து வருகின்றன. உறவுகளுக்குள் பொறாமை, சகோதரங்களுக்குள் வஞ்சகங்கள், ஊருக்குள் போட்டி, அயலுக்குள் சூழ்ச்சி, சதிகள் என நிலவுகின்றன.
அங்கு ஒவ்வொரு காழ்ப்புணர்ச்சியிலும் ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன. ஆனால் ஆசிரிய ஆசான்களுக்கு மாணவர்களது முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. எனது மாணவன் கடந்த வருடத்தை விட இம்முறை இன்னும் முன்னேற வேண்டும் என்பதே அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் என்றைக்கு பிரம்பைக் கைவிட்டார்களே, இன்று பொலிசார் லத்தியுடன் சந்தி சந்தியாக காவல் நிற்க வேண்டிய நிலை அதிகரித்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவக்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் துடுப்பாட்டப் போட்டி இடம்பெற்றது.
Related posts:
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் - ஜே.வி.பியின் தலைவர் அனுர
நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள்- 61 மில்லியன் ரூபா வருமானம் என மதுவரித் திணைக்...
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் - வீதியை மறித்து...
|
|