நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் – ஜே.வி.பியின் தலைவர் அனுர
Wednesday, May 24th, 2017
புதிய அமைச்சரவை மாற்றத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது நாட்டின் சட்டம் நீதி என்பன வீழ்ச்சியடையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது
இவை அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் இந்த நிலையில் அமைச்சரவையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான அமைச்சர்களை தொடர்ந்தும் அமைச்சரவையில் இணைத்துகொண்டதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் சரத் அமுனுகம
42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் நாட்டை வந்தந்தது – திங்கள்முதல் விநியோகிக்கப்படும் ...
வடக்கில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலைத் திட்டம் - தென்னை பயிற்செய்கை சபை தெரிவிப்பு!
|
|
|


