முன்னாள் பிரதி அமைச்சர் கருணா கைது!
Tuesday, November 29th, 2016
முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இன்னும் கொரோனா அச்சம் நீங்கவில்லை - இலங்கையை எச்சரிக்கும் சுகாதார பணிப்பாளர்!
தீ வைப்பு, கொலை அல்லது சண்டைகள் தற்பொழுதுள்ள பிரச்சினைகளை எந்த வகையிலும் தீர்வைத்தராது - இராணுவத் தள...
பெப்ரவரி மாத செலவுகளை ஈடுகட்ட தேர்தல் ஆணையம் 770 மில்லியன் கோருகிறது!
|
|
|


