எமது அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் பணத்தை திருடவில்லை – ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே உழைக்கிறார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டு!

Wednesday, October 20th, 2021

இந்த அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் இருந்து பணத்தை திருடவில்லை. அவர் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே உழைத்துவருகின்றார் என  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார முகாமைத்துவம் பலவீனம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்த அமைச்சர் மேலும் கூறுகையில் –

இந்த தொற்று நோயால் நாம் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.  இந்த பொருளாதாரத்தில் உலக வங்கி எத்தனை மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது? வெளிநாட்டவர் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. பில்லியன் கணக்கான டாலர்கள் நம் நாட்டுக்கு வருவது தடைப்பட்டுள்ளது,. எனவே நாங்கள் இதை கவனமாக கையாண்டோம்.

இதேநேரம் மக்களை பட்டினியில் விடவில்லை. பொருட்களின் விலைகள் ஏதோ ஒரு வகையில் அதிகரித்தன. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த கோவிட் தொற்று நோயால் இந்த நெருக்கடிகள் அனைத்தும் எழுந்தன.

இவை மிகவும் தற்காலிகமான விஷயங்கள். எதிர்க்கட்சிகள் தற்காலிக கோசங்களை முன்வைக்கின்றன. அரிசி, சீனி எரிவாயு மற்றும் எண்ணெய் பிரச்சினைகள் தற்காலிகமானவை. இவை தற்காலிகப் பிரச்சனைகளாக நாம் பார்க்கிறோம்.

எரிபொருள் விநியோகத்தை.121 ரூபாவில் வைத்திருப்பதன் மூலம் இந்த அரசாங்கம் மக்கள் மீது சுமையை ஏற்றியதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி கணக்குகளை கூறலாம். ஆனால் பாடலியின் புள்ளிவிவரங்களை மக்கள் ஏற்கவில்லை. அதனால் தான் அவர்களின் அரசு தோற்கடிக்கப்பட்டது.

மக்கள் அந்த அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டால் அந்தக் கதைகள் செல்லுபடியாகும். இவ்வாறு கதை சொல்லி நாட்டில் ஒரு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதனால்தான் எதிர்க்கட்சி தனது தொழிற்சங்கத் தலைவர்களை பயன்படுத்தி நாட்டில் எண்ணெய் தட்டுப்பாடு என்று பிரச்சாரம் செய்கிறது.

ஒரு கட்டத்தில் மக்கள் வரிசையில் எண்ணெய் பெற காத்திருந்தார்கள். இத்தகைய நெருக்கடிகள் உருவாக்க முயன்றாலும் இப்போது நாட்டு மக்களுக்கு அது பற்றி தெரியும்.

இந்த அரசாங்கம் மக்களை சுரண்டாது என்று நாங்கள் தெளிவாக கூறுகிறோம். இந்த அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் இருந்து பணத்தை திருடவில்லை. அவர் ஊழல் இல்லாத நாட்டை ஆளவே உழைக்கிறார். எனவே, இந்த நெருக்கடிகள் அனைத்தும் தற்காலிகமானவை எனவும் அவர் தெரிவித’;துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: