பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அவசரமாக சமர்ப்பிக்கப்படாது – அரசாங்கம் பகிரங்க அறிவிப்பு!

Saturday, April 29th, 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவசரமாக சமர்பிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றில் நேற்றையதினம் (28) அறிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலமே தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

எனினும் பல்வேறு தரப்பினரும் காட்டிய எதிர்ப்புக்காரணமாக இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே இந்த சட்டமூலத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து எவரும் தமது ஆலோசனைகளை வழங்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அனைவரின் கருத்துக்களும் உடன்பாடுகளும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: