முன்னாள் அமைச்சர் B. சிறிசேன குரே காலமானார்!
Tuesday, November 30th, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான B. சிறிசேன குரே இன்று (30) காலை காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சிறிசேன குரே, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
1979 ஆம் ஆண்டுமுதல் 1989 ஆம் ஆண்டு வரை சிறிசேன குரே, கொழும்பு மாநகர சபை மேயராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உர மூடைகளை அதிக விலையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை!
மீன்குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - நன்னீர் மீன்பிடி சங்கங்கள்!
அமைச்சர் கெஹலிய நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது - மருத்துவத்திற்கான மற்றும் சிவில் உரிம...
|
|
|


