மீன்குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – நன்னீர் மீன்பிடி சங்கங்கள்!

Friday, December 14th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல குளங்களும் நிரம்பியுள்ள நிலையில் மீன் குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை மாவட்டச் செயலகம் மேற்கொள்ள வேண்டும் என நன்னீர் மீன்பிடி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மாவட்டத்தின் தண்ணீர் முறிப்புக் குளம், வவுனிக்குளம், உடையார்கட்டுக்குளம், முத்துஐயன்கட்டுக்குளம் உட்பட பெரிய நீர்ப்பாசனக் குளங்கள், சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் என்பன நீரால் நிரம்பியுள்ளன.

எட்டு வரையான குளங்கள் உடைப்பெடுத்ததன் காரணமாக பெருமளவு மீன்கள் குளத்திலிருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் சகல குளங்களுக்கும் மீன் குஞ்சுகளை விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியினை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: