முன்னாள் அமைச்சர் விஜயகோன் காலமானார்!
Sunday, June 12th, 2016
முன்னாள் அமைச்சர் யூ.பி.விஜயகோன் கண்டி வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும் போது 79 வயதுடைய இவர் ஒரு ஆசிரியராகவும் பின்னர் சிவில் சேவை அதிகாரியாகவும் இலங்கை பொது நிர்வாக சேவையில் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார்.
மேலும், ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யாழ். மாவட்ட அமைச்சராக விஜயகோன் கடமையாற்றியுள்ளார். விஜயகோன் 2003 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது அரசியல் பிரவேசத்தின் பின்னர், தம்பதெனிய தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராவும் அமைச்சராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளிக்கிணங்க அவரது பூத உடல் பேராதனை பல்கலைகழகத்தின் வைத்திய பீடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Related posts:
5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்கள் வெளியிட வாய்ப்பு - பரீட்சை திணைக்...
அதிக வெப்பநிலையுடனான நாள்களில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிருங்கள் - சுகாதார அமைச்சினால்,...
மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் ஆரம்பம் !
|
|
|


