முதலாவது ஆண்டு நிறைவில் வைத்த அதே அழைப்பையே இரண்டாம் ஆண்டு நிறைவிலும் உங்கள் முன் வைக்கின்றேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!
Monday, November 29th, 2021
ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்ற முதலாவது ஆண்டு நிறைவில் உங்கள் முன் நான் வைத்த அதே அழைப்பை, இரண்டாம் ஆண்டு நிறைவிலும் மீண்டும் உங்கள் முன் வைக்கின்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்குப் பங்களிக்குமாறு அனைவரிடமும் வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிடுகையில் –
“நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். எனது நாட்டைப் பற்றி பெருமைப்படுகிறேன். அந்தவகையில் என்னிடம் எனது நாடு குறித்த ஒரு தொலைநோக்கு உள்ளது.
பயனுறுதி மிக்க குடிமக்களாக – ஒற்றுமை உணர்வோடு, ஒழுக்கப் பண்பாட்டுடன் செயற்பட்டு, உங்களினதும் எனதும் தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்குப் பங்களிக்குமாறு உங்கள் அனைவரிடமும் நான் வேண்டி நிற்கின்றேன் என தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


