முதலாம் திகதி முதல் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு!

Wednesday, June 29th, 2016

 

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய 8 ரூபாவிலிருந்து 9 ரூபாய் வரையும், அதிலிருந்து ஆரம்பிக்கும் கட்டணங்கள் 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணங்களின் தேசிய கொள்கைகள் கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தமானது 3.2 வீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த 3.2வீதமான கட்டணங்கள் திருத்தத்தின் குறைந்த கட்டண அறவீடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாத காரணத்தினால் இதனை நிராகரித்துள்ளதாக பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கட்டணங்களை 6 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், மிகவும் குறைந்தளவு கட்டணங்களை 1 ரூபாவால் அதிகரிப்பதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: