முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!
Thursday, July 28th, 2022
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவடையும் நேரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு இந்த புதிய பேருந்து சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீர் மின்னுற்பத்தி நிலைய ஆய்வு நடவடிக்கைகள் பூர்த்தி!
வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகள் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும...
இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்ற...
|
|
|


