முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் கால எல்லை ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021

அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்பதாக எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்தது. எனினும், தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - அங்கீகாரம் வ...
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு - 100 சந்தேக நபர்கள் அடையாளம் - மூ...
குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டம் - பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக சிரேஷ்ட ...