முடிவுக்கு வந்து கொழும்பு துறைமுக போராட்டம்..!

கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் வீரகெட்டிய – கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதக தன்மையில் நிறைவடைந்தமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காது அதனை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவருமாறு கோரி 23 தொழிற்சங்கங்கள் இணைத்து கடந்த சில நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்காரணமாக கொழும்பு துறைமுகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இந்நிலையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதக தன்மையில் நிறைவடைந்தமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வீழ்ச்சி அடைந்த பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவேன் - கோட்டாபய ராஜபக்ஷ!
தெரிவுக்குழுவின் தலைவராக சாகர காரியவசம் தெரிவு - ஆளும் - எதிர்த்தரப்பினரிடையே கருத்து மோதல்!
உலக மக்கள் தொகைக்கேற்ப சராசரியாக 250 பேருக்கு ஒரு அரச ஊழியர் அரசப் பணியில் இருக்க வேண்டும் - ஆனால் ...
|
|