முடிகிறது பொதுமன்னிப்பு காலம் – இராணுவப் பேச்சாளர்!

தப்பிச் சென்ற முப்படையினர் மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
11 ஆயிரத்து 847 இராணுவத்தினர், 679 கடற்படையினர், 525 விமானப்படையினர் சேவையை கைவிட்டு தப்பிச் சென்று சுதந்திரமாக நடமாடி திரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர், இவர்கள் சேவையாற்றிய படைப் பிரிவுகளுக்கு சென்று இணைந்து கொள்ளுமாறு படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களி்டம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மீண்டும் சேவைக்கு திரும்பாதவர்களை கைது செய்வதற்காக எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு - சுகாதார சே...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து விடுமுறைகளும் அடுத்த வாரம்முதல் இரத்து - அரச நிர்வாக அமைச...
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணியில் இராணுவம் - மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் தகவல்!
|
|