முச்சக்கர வண்டிகளின் மீற்றர் தொடர்பான சட்டமூலம் விரைவில்!

நாட்டில் முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றருக்காக நிலையான அமைப்பு முறை ஒன்று இல்லாமையினால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் கூறியுள்ளது.
இதன் காரணமாக பொது மக்களிடம் பணம் பெறும் போது மோசடிகள் இடம்பெறுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஆர். பல்லி கூறியுள்ளார். இந்த திட்டத்திற்காக அரசு கொண்டுவந்த சட்டமூலம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நுவன் வணிகரட்னவிடம் அத தெரண வினவியதற்கு, இது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதனால், அந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related posts:
உலக வங்கி ஏழு கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி!
தொடருந்து, பேருந்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுப்பு!
அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுச...
|
|