முச்சக்கரவண்டிகளை எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு பதிவு செய்யும் போது பணம் அறவிடத் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
Sunday, November 20th, 2022
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் போது 500 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
உரிய ஆவணங்களுக்காக அத்தொகை அறவிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 25,000 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் நாளை திங்கட்கிழமை (21) முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உயிர்ப்பாதுகாப்புள்ள சிறந்த 34 நாடுகளில் இலங்கைக்கும் இடம்!
ஊரியான் குளம் வாய்க்கால் புனரமைப்பு பணிகள் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆரம்பம்!
சில நாள்களில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம் - விமான ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாத...
|
|
|


