முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Monday, July 12th, 2021

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அவ்வாறு அணியத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமை ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை - வியாபாரிகளுக்கு 15 ஆம் திகதி வரை கால அவ...
மின் தேவைக்கமைய மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானம் - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு...
ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி - உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்...

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி டெங்கு பரிசோதனைக்கு அனுமதியுங்கள் -  யாழ். பிராந்திய சுகாதார பணிமனை!
சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் - காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறு...
புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர...