மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை!
Friday, June 2nd, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால் சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களின் பெறுபேறுகளின் மறு மதிப்பீட்டுக்காக சிங்கள மொழிமூலத்தில் 20334 மாணவர்களும் தமிழ் மொழிமூலத்தில் 4823 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம், ஏற்கனவே சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும், அந்தத் தடைகளைப் பொருட்படுத்தாமல், மாணவர் சேர்க்கைக்கு தேவையான புள்ளிகளை மறு மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்றால், அந்த மாணவர்களையும் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடவுச்சீட்டு விநியோகத்தில் தமிழ் பெண்களுக்கு புதிய நடைமுறை!
ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவ...
உலக சுகாதார தினம் இன்று - ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளில் உலகெங்கும் நினைவுகூரல்!
|
|
|


