உலக சுகாதார தினம் இன்று – ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளில் உலகெங்கும் நினைவுகூரல்!

Sunday, April 7th, 2024

உலக சுகாதார தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் நினைவு கூரப்படுகிறது.

இந்நிலையில் எமது ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு சுகாதார தினம் நினைவு கூரப்படுகிறது.

இதேவேளை உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு சுகாதார உரிமை சவாலுக்கு உள்ளாகி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அந்த ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காலநிலை நெருக்கடியை உருவாக்குவதாகவும், அது சுத்தமான காற்றை சுவாசிக்கும் மக்களின் உரிமையை பாதிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

காற்று மாசடைதல் காரணமாக ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு உயிரிழப்பு பதிவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கைகோர்த்துள்ள 140 நாடுகள் ஆரோக்கியமான சுகாதாரத்தை அடிப்படை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளன.

எனினும் பல நாடுகளில் மக்கள் சுகாதார சேவையை அணுகுவதற்கான உரிமையை உறுதி செய்யும் சட்டங்கள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: