மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் அறிவுறுத்து!
Thursday, January 4th, 2024
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்தார் -என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
00
Related posts:
|
|
|


