மீள்குடியேறிய மக்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்! மீள்குடியேற்ற அமைச்சிடம் ஈ.பி.டி.பி கோரிக்கை!

Saturday, June 25th, 2016

பலாலி வடக்கு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு துரிதகதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டத்திற்கான நிதியினையும் அதிகரிக்க வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றையதினம்(25) காங்கேசன்துறையின் ஒரு தொகுதி காணிகளை விடுவித்த பின்னர்  அன்ரனிபுரம் பகுதிக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோரிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்)  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன் வீட்டுத்திட்டத்திற்காக வழங்கப்படும் நிதி தற்போதைய விலையுயர்வின் காரணமாக வீடுகளை கட்டி முடிப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதால் அதனை தற்போதைய விலைவாசிகளுக்கேற்ப கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரிடம் வலியுறுத்தினார்.

மேலும் பலாலி வடக்கு  அன்ரனிபுரம் பகுதியில் உள்ள பலாலி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆரோக்கிய மாதா ஆலயம் ஆகியவற்றையும் பாவனைக்காக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததுடன் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் குறித்த பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட துறைசார்ந்தவர்கள் மிகவிரைவில் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப்போதைய ஆட்சியார்களிடம் இணக்க அரசியல் மூலம் விடுவிப்பதற்காக இணக்கம் காணப்பட்ட பகுதிகளே தற்போது மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதியளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

012

Untitled-2 copy

Related posts: