மீன் ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, July 25th, 2018

மீன் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை 150 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும் என்று ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்தப்படும் என்றும் இதில் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீன் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Related posts: