மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!
Thursday, September 30th, 2021
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொண்டு துறைமுகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் வழங்கி வைத்துள்ளனர்.
இதன்மூலம் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்களின் செயற்பாடுகள் மற்றும் துறைமுகங்களில் காணப்படுகின்ற பெறமதிசேர் உற்பத்திச் செயற்பாடுகள் போன்றன நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புதிய சட்டமூலம்
அல்லைப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் பலி - இருவர் படுகாயம்!
மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு - ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரை...
|
|
|


