மீனவ பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை!
Wednesday, July 4th, 2018
இலங்கை, இந்திய மீன்பிடித்துறை கூட்டு குழு மற்றும் அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளன.
இந்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தைகள் இந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்தப்படவிருந்தன. எனினும் இலங்கையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதால், அந்த கூட்டங்களை ஒத்திவைக்க நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த கூட்டத்தில் வைத்து, இலங்கையில் தடுப்பில் உள்ள 140 படகுகளையும் விடுவிக்க அரசாங்கத்தை தாம் வலியுறுத்தவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!
கொரோனா அச்சுறுத்தல்: பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, இரத்து செய்யப்படாது - ந...
|
|
|


