மீனவர் மீது தாக்குதல்: மறுக்கிறது கடற்படை!

Thursday, September 7th, 2017

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் தகவலை இலங்கை கடற்படை நிராகரித்துள்ளர்.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் கொமான்டர் சமிந்த வலாகுலுகேயிடம் எமது செய்தி சேவை வினவியது

அதனை முற்றாக மறுத்த அவர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் குறிப்பிட்டார்

எனினும், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய ஊடகமான என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது கச்சத்தீவு அருகே நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 10 தமிழக கடற்றொழிலாளர்கள் காயமுற்றதாகவும், 20 படகுகள் சேதமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 ஆயிரத்து 500 கடற்றொழிலாளர்கள் நேற்றுக் காலை கரை திரும்ப நேரிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: