மீனவர் பிரச்சினை குறித்து ஏழு கோரிக்கைகள் முன்வைப்பு!

Wednesday, May 11th, 2016

இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயுய்வதற்காக இந்திய வெளிவிவகார மற்றும் மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று(10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜனை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் தூதுக்குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் சம்மேளனத் தலைவர்களையும் இந்திய தூதுக்குழு சந்தித்து  கலந்துரையாடியுள்ளது.

இந்த சந்திப்பின்போது இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய  கடிதமொன்று இந்திய தூதுக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  கடல் வளங்களை அழிக்கும்  இழுவைத் தொழில் முறையை முற்றாக நிறுத்த வேண்டுமென்பதோடு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: