மீனவரின் உயிரிழப்பு தற்செயலான விபத்து – கடற்படைப் பேச்சாளர்!
Saturday, March 25th, 2017
மன்னார்,விடத்தல் தீவில் மீனவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒரு விபத்து என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலாக்குழுகே தினகரனுக்குத் தெரிவித்தார். சம்பவத்தின்போது மீனவர் தெப்பம் ஒன்றில் இருந்தபடியே மீன் பிடித்துள்ளார்.
வேகமாகச் சென்ற கடற்படையினரின் படகு இந்த தெப்பத்தில் மோதியதில் தெப்பம் கவிழ்ந்து மீனவர் கடலுக்குள் விழுந்துள்ளார். கடற்படையினர் மீனவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
விடத்தல் தீவில் மீனவரின் படகை கடற்படையினரின் படகு மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற்படைப் பேச்சாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் அது தற்செயலாக இடம்பெற்ற விபத்து எனக்கூறினார்.
Related posts:
அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் - 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ...
அபாய நிலையில் இலங்கை - 3 ஆம் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அறிவிப்பு!
விசா வழங்குவதனை நிறுத்தப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!
|
|
|


