மீண்டும் 5900 இராணுவ வீரர்கள் சேவையில்!

Thursday, May 2nd, 2019

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இதுவரையான காலப்பகுதியில் 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அறிவிக்காமல் சேவையில் இருந்து சென்ற சிலரே இவ்வாறு மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கும் இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக பதவி விலகல் கடிதத்தை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவ ஊடக பேச்சார் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தார்.

6 மாதக்காலத்திற்கும் குறைந்த காலம் சேவைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் தற்போதைய நிலையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது – தோழர் ஜீவன்!
வயதான தமது பெற்றோருக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க பிள்ளைகள் அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொள்ள வே...
மாணவர்களுக்கு பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம் - கல்வி மற்றும் பரீட்சை முறையிலும் மாற்றம் செய்வது...