மீண்டும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தயார்!
Sunday, November 27th, 2016
யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
உரிய திட்டங்களை முன்வைத்தால் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் - பிரதி சுகாதார சேவைக...
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அ...
|
|
|


