மீண்டும் மின்தடை ஏற்பட வாய்ப்பு!

Friday, May 10th, 2019

நீர் மின்னுற்பத்தியில் வீழ்ச்சி நிலையேற்பட்டுள்ளதனால், மீண்டும் மின்சார உற்பத்தியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக, மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுலக்ஷன ஜவர்தன தெரிவித்தார்.

பிரதான நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களான விக்டோரியா, காசல்ரீ, ரந்தெனிகல ஆகியவற்றின் நீர்மட்டம் மழைவீழ்ச்சிக்கு முன்னரான காலப்பகுதியில், நூறுக்கு 29.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், மின்னுற்பத்தில் பாரிய சவால்கள் காணப்பட்டதை போன்று, ஏப்ரல் 10ஆம் திகதிக்குப் பின்னர் இந்நிலைமை சிறிது மாற்றமடைந்தது.

எனினும் தற்பொழுது குறித்த நீர்த்தேக்கங்கள் நூறுக்கு 32.5 சதவீதம் அளவில் மீளவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலைமை தொடருமானால் மீண்டும் மின்னுற்பத்தியில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோன்றும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: