மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கோரிக்கை!

இரண்டாம் தவணை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதற்காக சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார அணுகுமுறைகள் குறித்த எழுத்து மூல பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் இணையவழிக் கற்பித்தல் தொடர்பான மேற்பார்வை ஒன்றை செய்தவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இன்மை காரணமாக இந்த மேற்பார்வையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பனம் பொருளிலான உற்பத்திகளுக்கு பயிற்சிகள் வழங்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை !
உள் நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான வரி ...
ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை - பதிவாளர்கள் சங்கத்தினரின் குற்றச்சாட்டு!
|
|